தனிமையில் இருக்கும் போதெல்லாம் எல்லோருக்கும் எதாவது யோசனை தோன்றும். எனக்கு அதிகம் தோன்றுவது... யாருக்கெல்லாம் நான் உண்மையானவனாக இருக்கிறேன். யாரெல்லாம் எனக்கு உண்மையானவர்களாக இருக்கிறார்கள் என்கிற கணக்கெடுப்பே அதிகம் வரும். கணக்கு பொய்த்து போனாலும் கணக்கெடுப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பதினாறு ஆண்டுகளாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவரே என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்பதையும், துளியளவும் மனமொத்துப் போகாத சிலருடனே தினம் தினம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் உணர்ந்த போது தான் தெரிந்தது....
அதிக நேரம் யாரோடு நாம் செலவிடுகிறோமோ அவரோடு இருக்கும் நெருக்கமும், தொடர்பில் இல்லாதவர்களிடம் இருக்கும் தூரமும் மாயை.
பலரை மகிழ்விக்க சிரமப்பட்டு உழைத்திருக்கிறேன். ஆனால் இம்மியளவும் நான் மகிழ்ந்ததில்லை...சிலருக்கு சிறிதளவில் செய்திருப்பேன். எனக்கு கடலளவு மகிழ்ச்சி வரும். இந்த வித்தியாசம் தெரிந்ததும் உணர்ந்தேன்...
இப்போது நான் யாரோடு இருக்கிறேனோ... அவர்கள் அனைவரோடும் நான் இல்லை. என்னோடு எவரெல்லாம் இல்லையோ... அவர்களோடு தான் நான் அதிகம் வசிக்கிறேன்....
எனது மகிழ்ச்சிக்காக என்னோடு இருப்பவர்களே... தயவுசெய்து விலகிசெல்லுங்கள். தனிமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்கள் ஆதாயத்திற்காக என்னை வருத்தி எடுக்காதீர்கள். உடம்பை விடவும் மனசுக்கு வலி அதிகம்.
நான் வேண்டுவதெல்லாம்.... எனக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை... என்னோடு இருப்பவர்களுக்கும் என்னைப்போல் மகிழ்ச்சி!!!